திருவாரூர் மாவட்ட கலை மன்றம் சார்பாக திருவாரூர் மாவட்டத்தில் 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளுக்கு மாவட்ட விருதுக்கான தேர்வாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு கலை இளமணி, கலை வளர்மணி, கலைச்சுடர் மணி, கலை நன்மணி, கலை முதுமணி, விருதுக்கு தேர்வு நடைபெற்றது
இந்நிகழ்வில் திருவாரூர் பஜனைமடச்சந்து பகுதியினை சேர்ந்த கோவிந்தராஜன் மகள் செல்வி.யாழினி கலை வளர்மணி விருதுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பாக தமிழக கலைப் பண்பாட்டு துறையின் கலை வளர்மணி விருது வழங்கப்பட்டது.
இவ்விருதினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் திருவாரூரில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சி அரங்கத்தில் உள்ள விழா மேடையில் ஞாயிறு இரவு பொன்னாடை அணிவித்து செல்வி.யாழினிக்கு கலை வளர்மணி விருதினை வழங்கினார்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment