மன்னார்குடி அருகே புதுமண தம்பதி வீட்டில் 50 பவுன் நகை ரூ 2.50 லட்சம் ரொக்க பணம் திருட்டு சம்பவம் குறித்து மன்னார்குடி போலீசார் விசாரணை. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 6 February 2024

மன்னார்குடி அருகே புதுமண தம்பதி வீட்டில் 50 பவுன் நகை ரூ 2.50 லட்சம் ரொக்க பணம் திருட்டு சம்பவம் குறித்து மன்னார்குடி போலீசார் விசாரணை.


திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடி அருகே மேலவாசல் குமரபுரம் மெயின் ரோட்டில் வசிப்பவர் வீரப்பன் மகன் ரஞ்சித் என்கிற கோவிந்தராஜ் வயது 28 வேளாண்மை தோட்டக்கலைத் துறையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கீர்த்திகா 23 இவர்களுக்கு திருமணம் ஆகி 5 நாட்கள் தான் ஆகிறது .பிப்ரவரி 1ஆம் தேதி திருமணம் முடித்த நிலையில் கீர்த்திகா நேற்று மதியம் 2:00 மணியளவில் அவரது சொந்த ஊரான காளாஞ்சிமேடு கிராமத்திற்கு சென்றுள்ளார் கணவர் கோவிந்தராஜூம் வேலைக்கு சென்றுள்ளார். 

இந்நிலையில் அவரது வீட்டின் முன்பக்க கதவு மற்றும் காம்பவுண்ட் கேட்டில் உள்ள கதவு அனைத்தும் பூட்டப்பட்டிருந்தது.  மாலை 6 மணி அளவில் கோவிந்தராஜ் வீட்டிற்கு வந்து பார்த்தபோது  முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு வீட்டின்   உள்ளே சென்று பார்த்தபோது பீரோ வைக்கப்பட்டுள்ள அறை கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

பீரோ திறந்து கிடந்துள்ளது அதிலிருந்து 50 சவரன் நகை மற்றும் ரூ 2.50 லட்சம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மன்னார்குடி காவல் நிலையத்திற்கு புகார் அளித்ததின் அடிப்படையில் அங்கு சென்ற மன்னார்குடி டி.எஸ்.பி அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் கரிகால் சோழன், மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதி மற்றும் குற்றப்பிரிவு போலீசார் மற்றும் திருவாரூர் கைரேகை தடயவியல்  நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று பதிவாகி இருந்த ரேகைகளை சேகரித்தனர்.     


பின்னர் வீட்டில் திருடிய மர்ம நபர்களை மோப்பநாய் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.  மன்னார்குடி அருகே புதுமண தம்பதி வீட்டின் முன்பக்க கதவின்  பூட்டை உடைத்து 50 பவுன் நகை மற்றும் ரூ 2.50 லட்சம்  பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


-செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad