திருவாரூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள மணல்மேட்டு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் இவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார் . இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் சுதிக்குமார் 20, மற்றும் பிரவீன்குமார் 19 நேற்று இரவு லாரியை ஓட்டி பயிற்சி எடுப்பதற்காக தனது நண்பர் தியாகபெருமாநல்லூரை சேர்ந்த விக்னேஸ்வரன் 29ஆகிய மூன்று பேரும் திருவாரூர் -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் லாரியை ஓட்டி பயிற்சி எடுத்துள்ளனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த ஓடம்போக்கி ஆற்றில் லாரி கவிழ்ந்தது.
இதில் அதிர்ஷ்டவசமாக ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால் மூன்று பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment