இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைவர் யாசர் அரபாத் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் முகமது அசாருதீன், மாவட்ட துணை செயலாளர் அப்துல் ரஷீத், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.
மாநில பேச்சாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹ்மான், மாவட்டத் துணைச் செயலாளர் ஹாஜா மைதீன் ஆகியோர் கண்டன முழக்கங்களை எழுப்பினார். இதில் மாநில செயலாளர் முஹ்ஷின் வழிபாட்டுத் தாளங்கள் சட்டம் 1991 சட்டத்தின்படி அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார். இந்நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட செயலாளர் காஜா மைதீன் நன்றி கூறினார். இதில் மாவட்ட பேச்சாளர்கள், கிளை நிர்வாகிகள், அணி செயலாளர் என பலர் கலந்து 250க்கும் மேற்பட்டவர்கள் ஆண்கள் பெண்கள் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment