இதற்கு புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வேண்டும் என கூத்தாநல்லூர் பகுதி பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் நகர்மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் தமிழக சுகாதாரத் துறை சார்பில் 15-வது நிதிக்குழு சுகாதார மானியத்தில் 1, கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதனைதொடா்ந்து ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி விழாவை தொடங்கி கூத்தாநல்லூர் நகர்மன்ற தலைவர் பாத்திமா பஷிரா தெடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் S.V.பக்கிரிசாமி, நகராட்சி ஆணையர் சித்ரா சோனியா,சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் வார்டு கவுன்சிலர் டி.கே.தேவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 1, கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணியை தொடங்கிய தமிழக அரசு மற்றும் சுகதார துறைக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வர்த்தகர்கள் சார்பில் நன்றி தெரிவித்தனர்.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment