குடவாசல் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அரசு கல்லூரியை அதே பகுதியில் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.குடவாசல் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அரசு கல்லூரியை அதே பகுதியில் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 5 February 2024

குடவாசல் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அரசு கல்லூரியை அதே பகுதியில் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.குடவாசல் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அரசு கல்லூரியை அதே பகுதியில் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குடவாசலில் 2017 ஆம் ஆண்டு டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. தற்காலிகமாக குடவாசல் பகுதியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் நிலையில், இதனை அப்பகுதியில் அறநிலையைத் துறைக்கு சொந்தமான இடத்தில் துவங்குவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வந்தது. இருப்பினும் இக்கல்லூரியை திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செல்லூர் பகுதிக்கு மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முணைப்பு காட்டியது.

அப்பகுதி மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் இதை தடுக்கும் விதமாக முன்னாள் அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான இரா. காமராஜ் சட்டமன்றத்தில் பல்வேறு முறை இது குறித்து கேள்வி எழுப்பி அதே பகுதியில் கல்லூரி அமைய நடவடிக்கை மேற்கொண்டார்.

 

இந்நிலையில் தற்போது செல்லூர் பகுதியில் இக்கல்லூரி கட்டடம் கட்டுவதற்கு 13.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதனை கண்டித்து நன்னிலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் காமராஜர் அவர்களின் சார்பில் நன்னிலம் தொகுதி மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய குழு தலைவர்கள் கூட்டாக மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ - யிடம் கோரிக்கை மனுவை அளித்தனர் .

 

அதில் கொரடாச்சேரி பகுதியில் கல்லூரி அமைக்கும் பணியை நிறுத்தி மாணவர்கள் மற்றும் பகுதி மக்களின் விருப்பத்திற்கு இணங்க குடவாசல் பகுதியில் கல்லூரிக்கான கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பாப்பா சுப்பிரமணியம், ஏஎன்ஆர். பன்னீர்செல்வம், சாந்தி தேவராஜன், ஒன்றிய குழு தலைவர்கள் சங்கர், கிளாரா செந்தில், விஜயலட்சுமி குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


- செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad