தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியக்கூடிய 90 சதவீதம் ஆசிரியர்களின் பணி உயர்வு வாய்ப்பை பறிக்கக் கூடிய மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணை 243 உடனடியாக ரத்து செய்ய வேண்டும் 99. சதவீத ஆசிரியர்களை கருத்துக்கு எதிரான அரசாணை 243ஐ ஆதரித்து நடைபெறும் நிகழ்ச்சிகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொள்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் இவைகள் உள்ளிட்ட உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஈவேரா, சண்முகவடிவேல் காசிராஜா வீரமணி வெங்கடேசன் ஆகியோர் கூட்டுத் தலைமை வகித்தனர், கோரிக்கைகளை விலக்கி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் ரவி தமிழக ஆசிரியர் கூட்டணி அமைப்பு செயலாளர் முரளி ஆகியோர் உரையாற்றினர் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு உயர்மட்ட குழு உடன் நடத்திய பேச்சு வார்த்தையில் வாய்மொழியாக ஏற்றுக்கொண்ட 12 கோரிக்கைகள் தொடர்பான எழுத்துப்பூர்வமான ஆணைகளை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன. முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment