காட்டுநாயக்கன் சமூகத்தினரை கொத்தடிமையாக்கி அவர்களிடம் பணம் பறிக்கும் அச்சமூகத்தை சேர்ந்த மாநில நிர்வாகிகள்: தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மன்னார்குடி பகுதியை சேர்ந்த மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகள் கோரிக்கை. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 5 November 2023

காட்டுநாயக்கன் சமூகத்தினரை கொத்தடிமையாக்கி அவர்களிடம் பணம் பறிக்கும் அச்சமூகத்தை சேர்ந்த மாநில நிர்வாகிகள்: தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மன்னார்குடி பகுதியை சேர்ந்த மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகள் கோரிக்கை.


காட்டு நாயக்கன் சமூகத்தை சேர்ந்தவர்களை அச்சமூகத்தை சேர்ந்த மாநில நிர்வாகிகள் கொத்தடிமையாக்கி பணம் பறிக்கும் செயலை தட்டிக்கேட்ட திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்த அச்சமூகத்தை சேர்ந்த மாவட்ட, மாநில நிர்வாகிகளின் குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாடு காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்கம் என்ற பெயரில் இராஜபாளையத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் இச்சமூக மாநில நிர்வாகிகள் காட்டுநாயக்கன் சமூகத்தை முன்னேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களிடம் சந்தா தொகையை வசூலித்துக் கொண்டு அச்சமூக குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தி வேலைவாய்ப்பினை ஏற்படுத்திட எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் சங்கத்தின் மூலம் காட்டுநாயக்கன் குடும்பங்களுக்கு கடன்வழங்கி கொத்தடிமையாக்கியுள்ளதாக அச்சங்க முக்கிய நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர். 


இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த காட்டுநாயக்கன் சமூகத்தை சேர்ந்த குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்காக இச்சங்கத்தை சேர்ந்த திருவாரூர் மாவட்ட தலைவர் முருகன் மற்றும் மன்னார்குடியை சேர்ந்த மாநில இளைஞர் அணி துணைத்தலைவர் சரவணன் ஆகிய இருவரும் பாடுபட்டு வருவதோடு, காட்டுநாய்க்கன் சமூக முன்னேற்றத்திற்காக அரசு நிர்வாகத்தை அணுகி அரசின் பல்வேறு சலுகைகளை பெற்று தந்து முன்னேற்றி வருகின்றனர்.


இதனால் ஆத்திரம் அடைந்த காட்டுநாயக்கன் சமூக சீர்த்திருத்த அமைப்பின் மாநில முதன்மை செயலாளர் மனோகரன் காட்டுநாயக்கன் சமூகத்திற்கு எதிராக செயல்படுவதாக கூறி சங்க நிர்வாகிகளான திருவாரூர் மாவட்ட தலைவர் முருகன் மற்றும் மாநில நிர்வாகி சரவணன் ஆகிய இருவரையும் சங்கத்தை விட்டு நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும் காட்டு நாய்க்கன் சமூகத்தை சேர்ந்தவர்கள் யாரும் முருகன் மற்றும் சரவணன் குடும்பத்தோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும், அவர்களது குடும்பத்திற்கு எந்தவித உதவியும் செய்யக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஒதுக்கிவைத்து தங்களது சமூகத்தினருக்கு சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார். 

 

இதனால் மனம் உடைந்த முருகன் மற்றும் சரவணன் காட்டுநாயக்கன் சமூகத்தை சேர்ந்த குழந்தைகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பினை பெற்று முன்னேற்றக் அடையக்கூடாது என்ற சுயநலனோடும், தொடர்ந்து இச்சமூகம் கொத்தடிமை ஆக்கி அதன் மூலம் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வரும் சங்க மாநில நிர்வாகிகள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து காட்டுநாயக்கன் சமூகத்தினரை பாதுகாக்க முன்வரவேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


-செய்தியாளர் தருண்சுரேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad