வலங்கைமானில் நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 5 November 2023

வலங்கைமானில் நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.


வலங்கைமான் பகுதியில் மூன்று ஆண்டுகளாக கட்டிடம் பழுதானதால்  இயங்காத நியாய விலை கடை மற்றும் வி.ஏ.ஓ அலுவலகம் கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தல், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் குமார் மங்கலம்  கே. சங்கர் தலைமையில் நடைபெற்றது. 

துணைத் தலைவர் வாசுதேவன் முன்னிலை வகித்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ் அனைவரையும்  வரவேற்று பேசினார்,  ஒன்றிய குழு தலைவர் குமாரமங்கலம் கே.சங்கர் பேசுகையில் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு வளர்ச்சிப் பணிகள் செய்ய ரூபாய் 6.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் தங்களது வளர்ச்சிப் பணிகள் குறித்த விபரங்களை எழுதி தரலாம் என பேசினார். 


திமுக உறுப்பினர் தாமரைச்செல்வன்  பேசுகையில் முனியூர் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. கடந்த மூணு ஆண்டுகளாக அந்தக் கட்டிடத்தில் பணிகள் எதுவும் நடக்கவில்லை. கிராம நிர்வாக அலுவலக சந்திக்க கிராம மக்கள் ஏரி வேலூர் கிராமத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. ரெகுநாதபுரம் ஊராட்சியில் உள்ள நியாய விலை கடை  கட்டிடம் பழுது காரணமாக  இயங்காமல் உள்ளது. எனவே  பழுதடைந்த கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.


-செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad