திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் அரித்துவாரம் மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட காவல் நிலையம், கால்நடை மருத்துவமனை, அஞ்சல் துறை உள்ளிட்ட அரசு, தனியார் அலுவலகங்கள் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வன், அரித்துவாரமங்கலம் சுகாதார மேற்பார்வையாளர் கோபு, சுகாதார ஆய்வாளர்கள் கார்த்திக், அரவிந்தன், சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இப்பகுதியில் கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்த உபயோகமற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு குளோரி நேசன் செய்யப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதி பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment