திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரியும் பணியாளர்கள் குடும்பங்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் தொகை வழங்கிட வேண்டியும். குடும்ப பாதுகாப்பு நிதியை வழங்கிட வேண்டிய அரசு நேரடியாக பணியாளர்களை நியமனம் செய்திடவும் பணியாளர்களை தனியாரிடம் ஒப்பந்தம் விடும் முறையை ரத்து செய்து விடவும் வலியுறுத்தி மருத்துவமனை முன்பு ஏஐடியுசி சார்பில் கண்டன முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில சிறப்பித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன். மற்றும் சந்திரராமன் சுந்தர் சுஜாதா வாசுதேவன் சுரேஷ் ஜவகர் காந்தி சுரேஷ் பாப்பையன் விக்னேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்வில் சங்க பொறுப்பாளர் ஐயப்பன் அவர்கள் நன்றியுரை கூறினார். மகளிர் அணி பொறுப்பாளர்கள் தங்கேஸ்வரி, மணிமேகலை, சரிதா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment