திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த அரித்துவாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் தெற்கு பட்டம், வடக்கு பட்டம், முனியூர், மருவத்தூர், அரித்து வாரமங்கலம், அவளிவ நல்லூர், பெருங்குடி, புளியக்குடி, களத்தூர், விளத்தூர், வீராணம், சந்திரசேகரபுரம், விருப்பாச்சிபுரம், ஆதிச்ச மங்கலம் உள்ளிட்ட 20 ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 30 ஆயிரம் மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அரித்து வாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரித்துவாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 25 ஆண்டுகளை கடந்த நிலையில் கட்டிடம் முற்றிலும் பழுதுதடைந்து, தொடர் மழை காலங்களில் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை சேதமடைந்தது, மேலும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் அச்சத்துடன் மருத்துவமனையை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் திமுக அரசு வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய 15 ஆவது நிதிக்குழு மாநிலத்தின் கீழ் ரூபாய் 60 லட்சம் மற்றும் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூபாய் 18 லட்சம் ஆக கூடுதல் ரூபாய் 78 லட்சம் மதிப்பீட்டில் 2000 சதுர அடி பரப்பளவில் புதிய மருத்துவமனை கட்டிடம் கட்ட ஊரக வளர்ச்சி துறை நிர்வாக அனுமதி வழங்கியது.
புதிய கட்டிடத்தில் படுக்கரை மருத்துவ பணியாளர்கள் ஓய்வுஅறை, கணினி அறை, பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய அறை, மருந்துபொருட்கள் இருப்பு அறை மற்றும் மருந்து பொருட்கள் வழங்கும் அறை மற்றும் கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன், புதிய கட்டுமான பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக முடிவுற்றது.
இருப்பினும் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் மக்கள் பயன்பாட்டிற்கு இதுவரை முன்வரவில்லை. எனவே பொது மக்களில் நலன் கருதி வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைவதற்கு முன்பாக ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment