இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ், ஏஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் ஆர்.சந்திரசேகரஆசாத் கலந்துகொண்டு பேசினார்கள். இதில் மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.சரவணன், எம்.நல்லசுகம், ஒன்றிய, நகர செயலாளர்கள் எஸ்.பாப்பையன், வே.பாக்யராஜ், வி.சி.கார்த்தி, ஜெ.கனேஷ், ஏ.பழனிவேல், மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் ஜெ.பி.வீரபாண்டியன், உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், இந்தியாவில் அதிகரித்து வரும் வேலையின்மையைப் போக்க ஒன்றிய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்களை மேற்கொள்ள வேண்டும், நீட் தேர்வில் இருந்து ஒன்றிய பாஜக அரசு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும், தமிழ்நாட்டில் இளைஞர்கள், மாணவர்களை குறிவைத்து நடத்தப்படும் போதைப் பொருள் விற்பனையை தடுத்து நிறுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும், இது போன்ற மனித வள சீர்கேடுகளுக்கு துணை போகும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடி மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளன. பொருளாதார அடிப்படையில் AAY, PHH, NPHH, NPHHS, NPHHN என 5 வகை குறியீடுகளுடன் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளது. புதிதாக விண்ணப்பித்தோருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டு வந்தது.
மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் பெயர்ந்தவர்கள் தற்போது குடியிருந்து வரும் முகவரியில் புதிய குடும்ப அட்டை நகல் பெற ரூ.25 செலுத்தி பெற்று வந்தனர். குடும்ப அட்டையை தொலைத்தவர்களும் நகல் அட்டைக்கு உரிய கட்டணம் செலுத்திபெற்று வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை மாதம்ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்து இத்திட்டத்தை கடந்த செப்.15-ம் தேதி முதல் செயல்படுத்தி வருகிறது.
இதனால் கடந்த ஜனவரி மாதம் முதல் புதிதாக குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படவில்லை மேலும், நகல் குடும்ப அட்டைகோரி விண்ணப்பித்தோர், முகவரி மாறி புதிய குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்தவர்களுக்கும் வழங்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்பட்ட புதிய குடும்ப அட்டையில் பொருளாதார அடிப்படையில் பெரும்பாலும் NPHH குறியீட்டுடன் முன்னுரிமையற்ற குடும்ப அட்டையாக வழங்கப்பட்டுள்ளது.
இதனால் உண்மையில் வறுமையில் உள்ளவர்களை பாதிக்கும் நிலை உள்ளது. அதே போல் குடும்ப அட்டை இல்லாததால் சாதி, இருப்பிடம், வருமானச்சான்றுகள், கேஷ் சிலிண்டர் இணைப்பு பெறுவதிலும் சிக்கல் தொடர்கிறது. எனவே மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை காரணம் காட்டி புதிய குடும்ப அட்டை வழங்கப்படாமல் உள்ளதை மறுபரிசீலனை செய்து விண்ணப்பித்து பல மாதங்களாக காத்திருப்போருக்கு உடனடியாக புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்து.
மேலும் வரும் 19 ம் தேதி முதல் 23 தேதி வரை திருவாரூர் மாவட்டம் முழுவதும் 5 நாட்களில் 25 ஆயிரம் இளைஞர்களை சந்தித்து உறுப்பினர் பதிவு செய்யும் இயக்கம் நடத்துவதும் மேற்கண்ட கோரிக்கையினை வலியுத்தி பிரச்சாரம் செய்வதும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment