திருவாரூர் ஆர்டிஓ சங்கீதா நேற்று தீ விபத்து நடந்த குடோனை இன்று பார்வையிட்டார். அப்போது அப்பகுதி பெண்கள் அவரை சூழ்ந்து கொண்டு, குடியிருப்பு பகுதியில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி கொடுத்ததால் தான் இது போன்ற விபத்து நடந்து உள்ளது. பெரிய அளவில் அசம்பாவிதம் நடக்கும் முன்பு பட்டாசு கடைகளை அகற்ற வேண்டும் என்ன முறையிட்டனர்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் ஆர்டிஓ உறுதி அளித்தார். மேலும் வலங்கைமான் பகுதி உள்ள அனைத்து பட்டாசு கடைகளையும் 2 நாட்களுக்கு மூட வேண்டும் என உத்தரவிட்டார். இந்த 2 நாளில் வருவாய்த் துறையினர் ஆய்வு நடத்துவார்கள். அப்போது அளவுக்கு அதிகமாக பட்டாசுகள் இருப்பு வைத்திருந்தாலோ, காவல்துறை, தீயணைப்பு துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல் இருந்தாலும் கடையை பூட்டி சீல் வைக்கப்படும்.
விதிமுறைகளை பின்பற்றும் கடைகளுக்கு மட்டுமே மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்படும் என்று ஆர்டிஓ கூறினார். ஆர்டிஓ உத்தரவுப்படி நேற்றுமாலை அனைத்து பட்டாசு கடைகள், தொழிற்சாலைகள் மூடப்பட்டன. பின்னர் தாசில்தார் ரஷ்யா பேகம் தலைமையில் பட்டாசு கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் தாசில்தார் ரசியா பேகம் ஆர்டிஓ கூறிய அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். கடைகளை குடியிருப்புகளுக்கு வெளியே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் கடைகளை பூட்டி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இதனை ஏற்க மறுத்து கூட்டத்தில் இருந்து வெளியேறிய பட்டாசு கடை உரிமையாளர்கள், இப்பிரச்சனை தொடர்பாக இன்று கலெக்டர் சாருஸ்ரீ யை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதனால் வலங்கைமானின் பரபரப்பு நிலவுகிறது.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment