திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 50, கிராம ஊராட்சிகளிலும், ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில், உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.
கிராம சபைகூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம் பொது நிதி செலவீனம் மற்றும் திட்டபணிகள் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், தூய்மை பாரத இயக்கம், ஐல் ஜீவன் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஆலங்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது, இதில் துணைத் தலைவர் ராசாத்தி முன்னிலை வகித்தார், ஊராட்சி செயலாளர் சேரன் தீர்மானங்களை எடுத்துரைத்தார். இதில் ஏராளமான கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்.
No comments:
Post a Comment