இதில் மன்னார்குடி தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் த.விஜயச் சந்திரன் தலைமை வகித்தார். பட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பங்கேற்று பேசினார். மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அ.அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ், நகர மன்றத் தலைவர் சோழராஜன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக பங்கேற்றனர். அறியப்படாத பல்வேறு சாதனையாளர்களை உள்ளடக்கிய நூறு தலைவர்களை ஆய்வு செய்து சிகரம் தொட்ட சிந்தனையாளர்கள் என்னும் தலைப்பில் 100 ஆய்வு கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.
முன்னதாக தொடர்ந்து 100 ஆய்வு கட்டுரைகளையும் இணைய வழியில் 24 மணி நேரம் சமர்ப்பித்து "அசிஸ்ட் வேர்ல்ட ரெக்கார்ட்" எனும் அமைப்பின் மூலம் உலக சாதனை நிகழ்வாக அங்கீகரிக்கப்பட்டு நூறு ஆய்வாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. சிகரம் தொட்ட சிந்தனையாளர்கள் நூலை சிறப்பு விருந்தினர் வெளியிட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் நகர மன்ற தலைவர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
கவிஞர்கள் மு.செல்லதாய் த.பொன்னம்மாள், சி.அழகரசி, அ.உமாசாந்தி த.ஆகாஷ், ப.பிரபாகரன், த.வேல்முருகன், முபாரக் ஆகியோர் பங்கேற்ற கவியரங்கம் நடைபெற்றது. தமிழ்ச் சங்கத்தின் நான்காம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டன. முன்னதாக ஒருங்கிணைப்பாளர் த. கண்ணகி வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சி நிறைவாக முதுகலை ஆசிரியர் எஸ். அன்பரசு நன்றி கூறினார்.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment