கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவ மழை குறைவு காரணமாக, மேட்டூர் அணை கால தாமதமாக திறக்கப்பட்டு முன்கூட்டியே மூடப்பட்டது. அக்கால கட்டங்களில் வடகிழக்கு பருவ மழையை நம்பி சம்பா சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக உரிய நேரத்தில் சம்பா சாகுபடி பணிகளை துவங்க இயலாமல் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின்னரே சாகுபடி பணிகள் துவங்கியது.
மேலும் அப்போது மூன்று போக சாகுபடி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, ஒருபோக சம்பா சாகுபடியை மிகுந்த போராட்டத்துக்கு இடையே விவசாயிகள் மேற்கொண்டனர். கடந்த ஆண்டு காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்தது. இதையடுத்து டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளும் வகையில் மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது.
இதே போல இந்த ஆண்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் போதிய அளவு இருந்ததை தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு மேட்டூர் அணை கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி திறக்கப்பட்டது. இருப்பினும் எதிர்பார்த்த அளவு தென்மேற்கு பருவமழை பொய்யாத நிலையில் மேட்டூர் அணை முன்கூட்டியே மூடப்பட்டது. இந்நிலையில் குடவாசல் வட்டாரத்தில் நடப்பு மாதம் வரை சம்பா, தாளடி சுமார் 13 ஆயிரம் ஹெக்டேர் நடவு செய்யப்பட்டுள்ளது.
சாகுபடிசெய்யப்பட்டுள்ளசம்பா பயிர்களை திருவாரூர் வேளாண்மை துணை இயக்குனர் விஜயலட்சுமி, வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன், வேளாண்மை அலுவலர் வெங்கடேஷ்வரன் ஆகியோர் பார்வையிட்டேன் ஆய்வு செய்தனர்.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment