திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த தொழுவூரில் கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் அரசினர் பல்வகை தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் அளவுக்கு அதிகமான வேகத்தில் செல்லும் நூற்றுக்கணக்கான வாகனங்களால் கல்லூரி செல்லும் மாணவர்கள் அச்சமடைந்து வந்தனர்.
இந்நிலையில் வாகனங்களில் வேகத்தை கட்டுப் படுத்தும் மிதமாக அரசினர் பல்வகை தொழில்நுட்ப கல்லூரி எதிரே இரண்டு வேகக் தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி வேகத்தடை அமைத்துக் கொடுத்த நெடுஞ்சாலைத்துறைக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment