இந்த நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி தனது தாத்தாவுடன் இந்த தொழிற்சாலையில் தங்கி அங்கு உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார் . இந்த நிலையில், தொழிற்சாலையின் உரிமையாளர் மேலநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான வேலாயுதம் என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டு, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமியிடம் மருத்துவர்கள் விசாரித்ததில் தாத்தா பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.
உடனடியாக மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், முதலில் சொந்த தாத்தாவை பிடித்து விசாரித்தனர், போலீசார், விசாரணையில் அது உண்மை இல்லை என தெரிய வந்தது .
உடனடியாக அந்த குழந்தையுடன் அன்றாடம் பழகும் வயதானவர்களை அடையாளப்படுத்தி விசாரித்த போது, கயிறு தொழிற்சாலையின், உரிமையாளரான 70 வயது நிறைந்த வேலாயுதம் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
உடனடியாக போக்சோ சட்டத்தின் கீழ் மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வேலாயுதத்தை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment