திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தூய வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1976 ஆம் ஆண்டுகளில் படித்த பழைய மாணவிகள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பழைய நினைவுகளை பறைசாற்றும் விதமாக ஒருவருக்கு ஒருவர் செல்பி எடுத்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
1976ம் ஆண்டுகளில் படித்த பழைய மாணவிகள் அரசு உயர் அதிகாரிகளாகவும், ஆசிரியர்களாகவும், தனியார்துறை, விளையாட்டு துறை, அரசியல், ஊடகம் மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வாட்ஸ் அப், பேஸ்புக், உள்ளிட்ட சமுக வலைதளங்கள் மூலம் ஒன்று சேர்ந்த மாணவர்கள் தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.
1976 ஆண்டுகளில் பணியாற்றிய ஆசிரியர்களை பழைய மாணவிகள் பாராட்டி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர். பழைய மாணவிகள் ஒன்று கூடி பள்ளிக்கு அடிப்படையான தேவைகளை பூர்த்தி செய்ய தங்களால் இயன்ற உதவிகளை செய்து கல்வியில் சிறந்த பள்ளியாக மாற்ற துணை நிற்பதாக தெரிவித்தனர்.
பின்னர் அனைவரும் ஒன்று கூடி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 1976 ஆம் ஆண்டு படித்த மாணவிகள் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தாலும் நண்பர்களை பார்த்த மகிழ்ச்சியில் சினிமா பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் சுமார் 600-க் கும் மேற்பட்டோர் மாணவிகள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment