மன்னார்குடியில் உள்ள மருதுபாண்டியர்களின் திருஉருவ சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களான மாமன்னர் மருது பாண்டியர்களின் 222 வது நினைவு தினதத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பந்தலடியில் உள்ள மருதுபாண்டியர்களின் திருஉருவ சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் அதிமுக அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், நகர செயலாளர் ஆர்.ஜி.குமார், ஒன்றியச்செயலர் தமிழ்ச்செல்வம், ஒன்றியக்குழுத் தலைவர் டி.மனோகரன், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் பொன்வாசுகிராம் நகர, ஒன்றிய பொருப்பாளர்கள் மற்றும் இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட நிர்வாகி அ.புவனேஸ்வரி மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டனர்.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment