தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம் இருள் நீக்கி , கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அறுவடை செய்யப்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலைய வாயில்களில் ஆயிரக்கணக்கான மூட்டைகள் கொட்டி வைத்துள்ளனர்.
இன்று பெய்த மழையில் அடித்துச் செல்வதை நேரில் பார்த்து ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது தமிழ்நாடு அரசு 22 சதவிகிதம் வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்ய முன்வர வேண்டும். சுமார் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு மூன்று லட்சம் ஏக்கரில் அறுவடை துவங்கியுள்ளது. 2 லட்சம் ஏக்கர் கருகி உள்ளது.
15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி துவங்க முடியாமல் நெருக்கடிக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் பல்வேறு சிரமங்களுக்கிடையே அறுவடை செய்த 250 மூட்டை நெல் காய வைப்பதற்கு ரூ15000 வரை செலவு செய்கின்றனர் . நல்ல காய்ந்த நிலையில் உள்ள நேல்லை கொள்முதல் நிலைய வாயில்களில் வாரக்கணக்கில் கொட்டி வைத்து விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர்.
இன்று பெய்த மழையால் அனைத்து நெல்லும் நனைந்து விட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு பொறுப்பேற்று நிபந்தனை இல்லாமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
திருவாரூர் மாவட்ட முதன்மை மண்டல மேலாளர் ராஜராஜன் தனியார் வியாபாரிகளிடம் கையூட்டு வாங்கிக்கொண்டு நெல்கொள்முதலை தடை செய்து வருகிறார். இதனால் கொள்முதல் செய்வதில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு ஒருவாரம் காலம் காயவைத்த நெல் மழையில் அடித்து செல்வதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
உடனடியாக இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார் . இதற்கு முன்னதாக மாவட்ட முதன்மை மண்டல மேலாளர் நெல்மணிகள் பதறுகளாக இருக்கிறது எப்படி எடுக்கமுடியும் என்றார். இதற்கு பி.ஆர்.பாண்டியன் நெல்மணிகளை இயந்திரத்தின் உதவியுடன் தூற்றும்போது நெல் தனியாகவும் பதறுகள் தனியாகவும் பிரிந்தது நல்ல நெல்மணிகளை மட்டும்தான்
நீங்கள் கொல்முதல் செய்வீர்கள் என்று கூறியதற்கு ஒரு அரசு அதிகாரிபோல் நடந்து கொள்ளாமல் சண்டியர்போல சட்டையை சுருட்டிகொண்டு அவ்வபோது பி.ஆர்.பாண்டியனிடம் வாய்சண்டையிட்டார். இதனால் உடனடியாக பி.ஆர்.பாண்டியன் மற்றும் விவசாயிகள் மண்டல மேலாளரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர் .
இதனை கண்ட நெல்கொள்முதல் நிலைய ஊழியர்கள் அங்கு நெல்மூட்டைகளை ஏற்றிகொண்டிருந்த லாரியை அவசர அவசரமாக நெல்மூட்டைகளை சரிவர கணக்கு பார்க்காமலுட் தார்பாய்கொண்டு மூடாமல் அனுப்பிவைத்தனர் .
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment