திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் அதிமுக கட்சி தொடங்கி 52 வது ஆண்டு விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது புரட்சி தலைவர், புரட்சி தலைவி அம்மா இவர்களால் மாபெரும் இயக்கமாக அதிமுகவை உருவாக்கினார்கள்.
புரட்சி தலைவர் எம்ஜிஆர் காலத்தில் 17 லட்சம் உறுப்பினர்களாக இருந்தவர்களை 1.5 கோடி உறுப்பினராக்கியவர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் புரட்சி தலைவர் மற்றும் புரட்சி தலைவி வழியில் 1.5 கோடி உறுப்பினர்களை 2 கோடிக்குமேல் உறுப்பினராக்கியவர் அண்ணன் எடப்பாடியார், 32 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியை யாரும் குறைகூற முடியுமா ? தமிழகத்தை அமைதி பூங்காவாக உருவாக்கிய இயக்கம் அதிமுக அதனுடைய ஆட்சி அதிமுக ஆட்சி சாதி சமயத்திற்கு அப்பாற்பட்ட இயக்கம் அதிமுக இந்த இயக்கத்திற்கு சாதி , மதம் கிடையாது.
இந்த இயக்கத்தில் 2 கோடி பேருக்கு மேல் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்றால் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் சாதி, சமயத்திற்கு அப்பாற்பட்ட இயக்கம் என்றால் அது அதிமுகதான் என மார்தட்டிக்கொள்ளமுடியும். அதனால்தான் நாளைக்கு தேர்தல் வந்தால்கூட அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் என்னுகிறார்கள் ஏனென்றால் இது மக்களுடைய கட்சி மக்கள் அதிமுகவை நேசிக்கிறார்கள்.
பள்ளியில் படிக்கும் எந்த குழந்தைகளுக்கு பசி, பட்டினி வந்துவிட கூடாது என்பதற்காக சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் இன்றைக்கு இந்த இயக்கத்தை உருவாக்கிய வரலாற்று தலைவர் இன்னைக்கு வேண்டுமானால் 2,3 முட்டை போடலாம். வேண்டும் என்றால் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என எதை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாமே தவிர புரட்சி தலைவர் கொண்டு வந்த திட்டத்தை எவராலும் குறை சொல்ல முடியாது என்றார். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் புரட்சி துரை, வலங்கைமான் பேரூராட்சி பெருந்தலைவர் சங்கர், உள்ளிட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர் .
செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment