இவர்களுக்கு தமிழக அரசு விளையாட்டு துறை சார்பில் ரூ 1 லட்சம் ரொக்க பணம் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ஜூனியர் நேஷனல் கால்பந்து போட்டி தேசிய அளவில் பங்கு பெற்று சொந்த ஊர் திரும்பிய மாணவிகளுக்கு சவளக்காரன் பள்ளியின் முன்னாள் கால்பந்து விளையாட்டு மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கிராம மக்கள் பாராட்டி வரவேற்றனர்.
மேளதாங்கள், பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கிராம மக்கள் மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்தங்கிய கிராமத்தை சேர்ந்த மாணவிகள் தேசிய அளவில் பங்கு பெற்று சாதனைகள் புரிந்து திருவாரூர் மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கு பெருமை தேடி தந்து வருகின்றனர்.
அவர்களை தமிழக அரசு மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிக்ச்சியில் இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன், ஒன்றிய செயலாளர் எஸ்.பாப்பையன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ராஜேந்திரன், கல்விக்குழு உறுப்பினர் பி.முருகப்பா, மாணவர் மன்ற பொருளாளர் க.கோபி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment