மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்பு குழுவினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 16 October 2023

மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்பு குழுவினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.


தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட குறுவை சாகுபடிக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 35, ஆயிரம் நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு  கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். 

உச்சநீதி மன்ற இறுதி தீர்ப்பின் படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை திறந்து விட வலியுறுத்தி உச்ச நீதி மன்றத்தின் அறிவுறுத்தலுக்கு பின் திறக்கப்படும் குறைந்த நீரைக் கூட தடுக்கும் அமைப்புகளைக் கண்டித்து தமிழக அரசு பலமுறை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியும், தமிழக விவசாயிகளை பற்றி கவலைப்படாத ஒன்றிய பாஜக அரசு மற்றும் தமிழக அரசை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட குறுவை சாகுபடிக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 35, ஆயிரம் நிவாரணம் வழங்கிட வலியுறுத்தியும், வேளாண் பணிகள் இல்லாமல் பாதிக்கப்பட்ட விவசாய கூலி தொழிலாளர் குடும்பத்திற்கு 10 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பெரியார் சிலை முன்பு காவிரி உரிமை மீட்பு குழுவினர் மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த ஆர்ப்பாட்டம் காவேரி உரிமை மீட்பு குழு  மன்னை இரா, இராசசேகரன் தலைமையில் நடைெற்றது இதில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் மருத்துவர்.பாரதிச்செல்வன் இலரா, காவிரி உரிமை மீட்புக்குழு ஆரூர் ச.கலைச்செல்வம்,  தமிழர் தேசியக் களம் மன்னை மௌ.முகமது ஃபைசல், திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் நாம் தமிழர் கட்சி ஷமீம், நா.த.கட்சி திருவாரூர் தெற்கு மாவட்த் தலைவர்  ந. வெங்கடேஷ் குமார், மன்னை வணிகர் நல சங்கம் செல்வகுமார்,  ஜீவானந்தம், மற்றும் காவிரி உரிமை மீட்பு குழு பைங்கநாடு பாலமுருகன், கண்ணன் முன்னிலை ஆர் எஸ் செந்தில், இருள்நீக்கி ரமேஷ்  மன்னை ஜில்லு பிரவீன், சோழபாண்டி சே. செந்தில்குமார், சேகரை சே. சிவா, சு.கோபாலன் இராதாநரசிம்மபுரம், மன்னை சா.பெருமாள் சோனாபேட்டை சதீஷ், ஆரூர் செல்வமணி,  கன்னியாகுறிச்சி வே.வீரையன், மன்னை இரா பாரதிதாசன், மன்னை வசந்தன், சமுதாயம் பூபாலன், ஆரூர் மு கார்த்திகேயன், கன்னியாகுறிச்சி பா குமரேசன், வரவேற்பு மன்னை ச.நிரஞ்சன்,  உள்ளிட்டோர் 50 க்கும் மேற்பட்டோர் பலர் கலந்து கண்டன முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .


-செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad