மன்னார்குடி அருகே கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 16 October 2023

மன்னார்குடி அருகே கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு


கலைஞர்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட மாணவரணி மற்றும் திருவாரூர் மாவட்ட பார்வையிழுப்பு சங்கம் , புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமணை இணைந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள மழவராயநல்லூரில் இலவச கண் பரிசோதணை பொதுமக்களுக்காக தனியார் திருமண மண்டபத்தில் இலவசமாக நடைபெற்றது. 

இதில்  500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண்புரை , கண்நீர் அழுத்தம் , கருவிழி புண்கோளாறு , விழித்திரை போன்ற சோதனைகளை செய்து கொண்டனர்.  இதில் பார்வை கோளாறு காரணமாக 40 நபர்கள் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு தேர்தெடுக்கபட்டனர் . 


இந்நிகழ்வில் கொரடாச்சேரி பேரூர் கழக செயலாளர் பூண்டி.கே.கலைவேந்தன், கோட்டூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பால ஞனவேல் , மாவட்ட துணை அமைப்பாளர் மற்றும் வை.யோகபாலன் ,ஊராட்சி மன்ற தலைவர் ரேனுகா வெங்கடாசலம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் .


- செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad