தமிழ்நாடு ஹைட்ராலிக் மற்றும் எர்த் மூவர்ஸ் ஆபரேட்டர்கள் நல சங்கத்தின் 10 ஆண்டு சாதனை விளக்க மாநாடு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இச்சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ராபர்ட் தலைமையிலும் இச்சங்கத்தின் நிறுவன தலைவர் சாமி செல்வமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன் குமார், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம். செல்வராஜ் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க. மாரிமுத்து ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள்.
மாநாட்டில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, நல வாரியத்தில் ஆபரேட்டர்களை இணைத்தல் மற்றும் நலிவுற்ற ஆபரேட்டர்களின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது தமிழ்நாடு முழுவதும் இருந்து ஹைட்ராலிக் ஆபரேட்டர்கள் நிர்வாகிகள் தங்கள் குடும்பத்தினருடன் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் மிகவும் ஆபத்தான கல்குவாரியில் மற்றும் ஆழமான ஆபத்தான பணிபுரியும் ஆப்ரேட்டர்களுக்கு ஹைட்ராலிக் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் இருக்க வேண்டும்.
கல்குவாரிகள் போன்ற ஆபத்தான இடங்களில் கனிம வளத்துறை சேர்ந்த அரசு அதிகாரிகள் 5 மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு நடத்த வேண்டும். மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, போன்ற இடங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிகமாக பணிபுரிந்து வரும் ஹைட்ராலிக் ஓட்டுனர்களுக்கு அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஹைட்ராலிக் ஓட்டுநர்கள் பணி அமர்த்தும் பெரிய நிறுவனங்கள் வடமாநில தொழிலாளர்களை விட தமிழக ஆப்ரேட்டர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நல வாரிய தலைவர் பொன் குமார் பேசுகையில் தமிழக முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் சொன்னதை விட சொல்லாத திட்டங்கள் நிறைய கொண்டு வந்துள்ளார். எல்லா நாளிதழ்களும் உலக நாட்டில் உள்ளவர்கள் தமிழக முதலமைச்சரை பாராட்டி வருகிறார்கள் முதல்வர் இரவு பகலாக உழைத்து வருகிறார். சொன்னதை செய்து வருகிறார் சொல்லாததையும் செய்து வருகிறார். கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் பிள்ளைகளுக்கு காலை உணவு திட்டம் தேர்தல் அறிக்கையில் சொல்லாதது விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருவதாக பேசினார்.
- செய்தியாளர் தருன்சுரேஷ்
No comments:
Post a Comment