இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது, மதுபோதையில் வாகனங்களை ஓட்ட கூடாது, சாலை விதிகளை மதிப்பது தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்ற நீதிமன்ற உத்தரவை பொதுமக்களுக்கும் மற்றும் வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே ஆதிச்சபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியான சக்கரபாணி, புஷ்பா ஆகியோரின் குழந்தைகளான ராகவி, விஜய் ஆகியோர் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள்.
இவர்கள் உண்டியல் சிறுசேமிப்பு மூலம் சேமித்து வைத்த தொகையை கொண்டு ஹெல்மெட் அணிந்து வரும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகளுக்கு 1/2 லிட்டர் பெட்ரோல் வழங்கினார்கள். வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டி பெட்ரோல் வழங்கிய சம்பவம் சாலையில் சென்ற பொதுமக்கள் , மற்றும் வாகன ஓட்டிகள் ராகவி மற்றும் விஜய் ஆகியோரை வெகுவாக பாராட்டினார்கள்.
அப்போது பேசிய மாணவி ராகவி கூறுகையில் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படுத்தாத வகையில் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதற்காக தான் நான் சேமித்து வைத்த தொகையில் பெட்ரோல் வாங்கி கொடுத்துள்ளேன் இது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு என தெரிவித்தார்.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment