மேகதாட்டு அணை கட்டும் பிரச்சனையில் தமிழ்நாடு அரசு மவுனம் காப்பது மிகுந்த நம்பிக்கையை இழக்கச் செய்கிறது இது குறித்து தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 1 July 2023

மேகதாட்டு அணை கட்டும் பிரச்சனையில் தமிழ்நாடு அரசு மவுனம் காப்பது மிகுந்த நம்பிக்கையை இழக்கச் செய்கிறது இது குறித்து தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து காவிரி விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுதலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் தெரிவித்ததாவது கர்நாடகாவில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்று இருக்கிற அம்மாநிலத்தினுடைய துணை முதலமைச்சர் நீர் பாசன துறை அமைச்சராக பொறுப்பேற்றுகிற டி.கே.சிவகுமார் தொடர்ந்து மேகதாது அணையை கட்டியே தீருவோம் அதற்கான அனுமதிகளை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

விவசாயிகள் தண்ணீரின்றி கருகின்ற பயிர்களை காப்பாற்றுவதற்கு வீதிகளில் நின்று போராடி வருகிறார்கள் . இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதன் அடிப்படையில் ஜூன் மாதத்திற்கான ஒன்பது புள்ளி ஒன்று டிஎம்சி தண்ணீரை விடுவிக்க கர்நாடக அரசு மறுக்கிறது .


சிவகுமார் தமிழ்நாட்டிற்கு ஜூன் மாத ஒதுக்கீடான தண்ணீரை தரமாட்டோம் என்று சட்ட விரோதமாக பேசுகிறார். காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் அதனை பெற்றுத் தருவதற்கான முயற்சியை ஆணையமும் மேற்கொள்ளவில்லை பரிதவிக்கின்ற விவசாயிகளை பாதுகாப்பதற்கு தமிழ்நாடு அரசும் முயற்சிக்கவில்லை.


இந்த நிலையில் குறுவையும் கேள்விக்குறியாக இருக்கிறது மேகதாட்டு அணை கட்டும் பிரச்சனையில் தமிழ்நாடு அரசு மவுனம் காப்பது மிகுந்த நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.


தென்பண்ணையில் தீர்ப்பாயம் அமைப்பதற்கு எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார்.  அது குறித்தும் தமிழ்நாடு அரசு வாய் திறக்காமல் மௌனம் காய்கிறது இங்கே இருக்கிற விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பருத்தி விவசாயிகள் விலை கிடைக்காமல் வீதியில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள்.


மழையால் அழிந்து மடிவதை பார்த்து கண்ணீர் விடுகிறார்கள் ஆனால் உரிய விலை கிடைப்பதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் விவசாயிகளை புறக்கணிக்கிறது தென்னை விவசாயிகள் தேங்காய்க்கு விலை கேட்டு போராடுகிறார்கள் விற்க முடியாமல் வீதிகளில் கொட்டி காத்துக் கிடக்கிறார்கள்.


ஆனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதற்கான எந்த நடவடிக்கையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசு விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் விவசாயிகளை ஒடுக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறதோ என்கிற அஞ்ச தோன்றுகிறது.


தமிழ்நாடு முதலமைச்சர் இதுகுறித்து தெளிவான விளக்கம் அளித்து தமிழக விவசாயிகளை பாதுகாக்க முன் வருவதோடு காவிரி உரிமையை மீட்டெடுக்கவும் தென்பண்ணையில் உரிய நீதி கிடைக்கவும் உரிய அவசரகால நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.


என்று நான் வலியுறுத்துவதோடு தமிழக அரசாங்கம்உடனடியாக அவசரகால நடவடிக்கை எடுத்து கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை பெறுவதற்கும் இருக்கின்ற தண்ணீரை 15 ஆயிரம் கனஅடியாகவாது விடுவித்து முளைத்து கருகக் கூடிய விவசாய பயிர்களை பாதுகாப்பதற்கு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார் .



-செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad