திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணைத்தாழி உற்சவம் நடைபெற்றது. ராஜகோபாலசாமி கோவிலில் ஆணி தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு கொடியேற்றம் தினத்திலிருந்து ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு வாகனத்திலும் அலங்காரத்திலும் சுவாமி வீதியுலா நடத்தப்பட்டு வருகிறது.


இதன் ஒரு பகுதியாக இன்று வெண்ணைத்தாழி அலங்காரத்தில் சாமி வீதி உலா நடத்தப்பட்டது. இதில் வெள்ளி குடத்தை கையில் ஏந்தி தவழும் கண்ணன் திருக்கோலத்தில் ராஜகோபாலசுவாமி வீதி உலா வந்தார். பல்லக்கில் கண்ணனாக வந்த ராஜகோபால சுவாமியை வழியெங்கும் பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment