மன்னார்குடியில் தென்னிந்திய அளவிலான ஹாக்கி போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி முதல் இடம் ரூ 50 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் சுழற்கோப்பையை தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 2 July 2023

மன்னார்குடியில் தென்னிந்திய அளவிலான ஹாக்கி போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி முதல் இடம் ரூ 50 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் சுழற்கோப்பையை தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார்.


திருவாரூர் மாவட்டம்,  மன்னார்குடியில்  டேரிங் யங்  ஸ்டார் ஹாக்கி கிளப் நடத்திய  தென்னிந்திய அளவிலான  ஆண்கள் ஹாக்கி  போட்டி 29,  தேதி  தொடங்கி     4 நாட்கள்  நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா,  கர்நாடகா, கேரளா  புதுச்சேரி ,உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுமார் 16 க்கும் மேற்பட்ட அணிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடினார்கள். 


இதில் பல்வேறு சுற்றுகள் நடைபெற்று இன்று  இறுதிப் போட்டி  நடைபெற்றது.   இதில் தமிழ்நாடு காவல்துறை அணி முதல்  இடம்   ரூ  50 ஆயிரம் ரொக்க  பணம் மற்றும் சுழற்கோப்பையை   வென்றது .  இரண்டாவது பரிசு சென்னை   அக்கவுண்ட் ஜெனரல்   அணி ரூ 40 ஆயிரம், மூன்றாவது  பரிசு   பெங்களூர் கனரா வங்கி அணி ரூ 30 ஆயிரம்   நான்காம் பரிசு  ஜி.எஸ்டி  அணி ரூ 20 ஆயிரம்  வென்றனர்.  வெற்றிபெற்ற அணிகளுக்கு   தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஸ்குமார் ஆகியோர்   பரிசுகள் மற்றும் சுழற்கோப்பைகளை  வழங்கி பாராட்டினார்கள் .


- செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad