ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கூத்தாநல்லூரில் மலேசியா டத்தோ ஸ்ரீ அல். ஹஜ் மாயின் பர்கத் அலி அபூபக்கர் பர்கத் குழுமம் சார்பில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு மட்டன், சிக்கன் பிரியாணி, சைவம் விருந்து அனைத்து மதத்தினர் பங்கேற்பு - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 1 July 2023

ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கூத்தாநல்லூரில் மலேசியா டத்தோ ஸ்ரீ அல். ஹஜ் மாயின் பர்கத் அலி அபூபக்கர் பர்கத் குழுமம் சார்பில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு மட்டன், சிக்கன் பிரியாணி, சைவம் விருந்து அனைத்து மதத்தினர் பங்கேற்பு


ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களின் அவர்கள் சக்திக்கு உட்பட்டு பிராணிகளை அறுத்து அவற்றின் இறைச்சி சொந்த பந்தங்கள், நண்பர்கள் ஏழை எளியோருக்கு அன்பளிப்பாக தருவது வழக்கம் அந்த வகையில் கூத்தாநல்லூரில் மலேசியா டத்தோ ஸ்ரீ அல். ஹஜ் மாயின் பர்கத் அலி அபூபக்கர் பர்கத் குழுமம் சார்பில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு மட்டன், சிக்கன் பிரியாணி, சைவம் விருந்து வைத்து அசத்தல்  இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளின் ஹஜ் பெருநாள் என அழைக்கப்படும் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் சமுதாய நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் மலேசியா டத்தோ ஸ்ரீ அல். ஹஜ் மாயின் பர்கத் அலி அபூபக்கர் பர்கத் குழுமம் சார்பில் அனைத்து சமுதாய மக்கள் பங்கேற்ற விருந்து உபசரிப்பு விழாவில் சுமார் 5, ஆயிரம் பேருக்கு சைவம், மற்றும் அசைவ விருந்தானது மதியம் 1 மணி தொடங்கி மாலை 3 வரை நடைபெற்றது. இந்த சமுதாய நல்லிணக்க விருந்தில் கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள அனைத்து மதத்தையும் சோ்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர்.



-செய்தியாளர் தருண்சுரேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad