திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் டேரிங் யங் ஸ்டார் ஹாக்கி கிளப் நடத்தும் தென்னிந்திய அளவிலான ஆண்கள் ஹாக்கி போட்டி 29, மற்றும் 02ம் தேதி ஆகிய 4 நாட்கள் நடைபெறுகிறது. இப்போட்டியை மன்னார்குடி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அஸ்வத் ஆண்டோ தொடங்கி வைத்தார்.


இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா புதுச்சேரி ,உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுமார் 16 க்கும் மேற்பட்ட அணிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடுகிறார்கள் இந்த போட்டியில் ஏராளமான விளையாட்டு ஆர்வலர்கள் கண்டு களித்து வருகின்றனர்.
பல்வேறு சுற்றுகள் நடைபெற்று காலிறுதி , அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி 01ம் தேதி நடைபெற உள்ளது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் சுழற்கோப்பை கள் வழங்கும் நிகழ்ச்சி ஜூலை 2ந்தேதி மாலை நடைபெற உள்ளது. முதல் போட்டியானது சென்னை காவல்துறை அணியும் , கோவில்பட்டி அணியும் விளையாடி வருகின்றனர்
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment