திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், எடமேலையூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஆவின் நிறுவனத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கால்நடை மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் .தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தார். இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஆவின் நிறுவனம் இணைந்து முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாவட்டத்தில் 100 பெரிய அளவிலான கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் வட்டம், எடைமேலையூர் ஊராட்சியில் நடைபெற்றது. முகாமில் கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசிகள், குடற்புழுநீக்க மருந்துகள், செயற்கைமுறை கருவூட்டல், சிறிய அளவிலான அறுவை,. சிகிச்சைகள்புற ஒட்டுண்ணிகள் நீக்கம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது.


கால்நடை நோய் புலனாய்வு பிரிவின்மூலம் கால்நடைகளுக்கான தோல் நோய்கள், இரத்தம், சளி, பால் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு நோய் தாக்குதல் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து கால்நடை வளர்ப்போர்களுக்கு விளக்கம் அளிக்கப் பட்டது. இதே போல் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறும் கால் நடை முகாம்களை அப்பகுதி மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்தார்.
இம்முகாமில் 1000-க்கும் மேற்பட்ட ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு பல்வேறு வகையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. பின்னர் அதனைத்தொடர்ந்து கிடேரி கன்றுகளுக்கான கருச்சிதைவு நோய் தடுப்பூசியும் சிறப்பு கிடேரி கன்றுகள் வளர்ந்தவர்களுக்கும் அதிகபடியான பால் உற்பத்தி செய்தவர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆவின் நிறுவன பொது மேலாளர் மருத்துவர் ராஜசேகரஹரி செட்டி, நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ் செல்வன் துணை பதிவாளர் (ஆவின் நிறுவனம்) விஜயலெட்சுமி கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குநர் ஹமீது அலிவட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்ரமணியன், நமச்சிவாயம் ஊராட்சி மன்றத்தலைவர் கோமளா மனோகரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் கால்நடை வளர்ப்போர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment