மன்னார்குடி அருகே முன்னால் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 3 ந் தேதி பிறந்த பெண் குழந்தைக்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் செம்மொழி என பெயர் சூட்டி 1 1/2கிராம் மோதிரம் வழங்கினார்.


கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மழவராயநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் கொடியேற்றினர். பின்னர் அந்த கிராமத்தில் ஜூன் 3ந் தேதி பிறந்த பெண் குழந்தைக்கு செம்மொழி என பெயர் சூட்டி 1 1/2 கிராம் மோதிரம் வழங்கினார்.
முன்னால் முதல்வர் கலைஞரின் 100வது பிறந்த நாளை பொதுமக்களுக்கு 100 மரக்கன்றுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட ஒன்றிய நகர, இளைஞரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- -செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment