சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 26 June 2023

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அரசு கலைக்கல்லூரி, தனியார் கல்லூரி,  மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகளை பொதுமக்களுக்கும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான பேரணியை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ  கொடியசைத்து தொடங்கி வைத்து போதை ஒழிப்பு குறித்து மாணவ, மாணவியர்களுடன் உறுதிமொழி எடுத்து கொண்டனர். 


இந்த பேரணியில் ஏராளமான பள்ளி கல்லூரி  மாணவ மாணவியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள்  திரளானோர் கலந்துகொண்டு போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்கி பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad