திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பாமனியில் நாகநாதர் கோவிலில் திருமஞ்சன விழாவை முன்னிட்டு நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் ஆகிய மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும் பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட முப்பத்து ஆறு வகை விசேஷ திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.


இறுதியாக, நடராஜரும், சிவகாமி அம்பாளும் சமேதரராக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, கனகசபை மண்டபத்தில் பக்தர்களுக்கு ஆணி திருமஞ்சன தரிசனம் அளித்தனர் . தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ நடராஜன் , சிவகாமசுந்தரிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது .
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment