தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற வைணவ ஆலயங்களில் சிறப்பு வாய்ந்தது மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ஆலயம். இங்கு ஆணி தெப்பத்திருவிழா வருகிற ஜூலை 03 ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்திருவிழாவின் துவக்கமாக கொடியேற்று நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. ராஜகோபால சுவாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் கருடன் சின்னம் வரையப்பட்ட கோவிலில் பூஜை செய்து தீட்சிதர்கள் ஏற்றினார்கள்.
அப்போது ராஜகோபாலசாமி கொடிமரத்தின் முன்பு கல்யாண அவசர திருக்கோலத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார். திருவிழாவை முன்னிட்டு தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது. கருட சேவை வருகிற 28 ம் தேதி அன்று நடைபெற உள்ளது. ஜூலை 3 ஆம் தேதி அன்று இரவு தமிழகத்தில் மிகப்பெரியகுளமான 22 ஏக்கர் பரப்பளவுள்ள ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்


No comments:
Post a Comment