அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ஆலங்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமினை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, மற்றும் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.


பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பொதுமக்கள் உடம்பில் உள்ள பிரச்சனையை தயக்கமில்லாமல் மருத்துவரிடம் தெரிவித்தால் தான் அந்த பிரச்சனையை மருத்துவர்கள் தீர்ப்பார்கள் விரைவில் மன்னார்குடி மின்னுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் மன்னாா்குடி முழுமையாக மின்னுவதற்கு அனைவருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில் தொற்றா நோய்களுக்கான ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, முழு ரத்தப் பரிசோதனை , பொது மருத்துவச் சிகிச்சை, எக்கோ, இசிஜி, பொது அறுவை சிகிச்சை, கா்ப்பினிகள், பெண்கள் சிறப்பு மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல், மனநல மருத்துவச் சிகிச்சைகள் குறித்து பொதுமக்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள். அதனை தொடர்ந்து முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment