

இந்த கூட்டத்தில் அவர் பேசும்போது கூறியதாவது, திமுக ஆட்சிக்கு வரும் போது பிரச்சினையும் கூடவே வரும் முன்பு 2ஜி, தற்போது 30ஆயிரம் கோடி, செந்தில் பாலாஜி வந்து இருக்கிறார். 6 கட்சி போனவருக்கு ஏன் முதலமைச்சர் பதறுகிறார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலே அமலாக்க துறையினால் செந்தில் பாலாஜியை கைது செய்யப்படுகிறார். ஆதாரம் இருந்தால் யாரை வேண்டுமானாலும் அமலாக்கத்துறை கைது செய்யலாம் சீல் வைக்கலாம் என்ற அதிகாரத்தை ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்தார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இரண்டு மாதத்திற்குள் விசாரணை செய்து முடிக்க வேண்டும், முகாந்திரம் இருக்கிறது என உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமலக்க துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன் அடிப்படையில் ஆதாரத்துடன் எடுக்கப்பட்ட கைது நடவடிக்கைக்கு முதலமைச்சர் இப்போது ஏன் பதறுகிறார். நாங்கள் மிசாவை பார்த்துள்ளோம் என கூறுகிறார், திமுகவை நாங்கள் எல்லா காலத்திலும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். தோற்கடித்து கொண்டு தான் இருக்கிறோம்.
அரசு ஊழியர்களுக்கு ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுகிறோம் என திமுகவினர் தேர்தல் வாக்குறுதி கூறினார்கள் அதனை நிச்சயம் நிறைவேற்ற முடியாது. இது நாடாளுமன்ற தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவின் தோல்விக்கு வழிவகுக்கும் இதனை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
விலைவாசி உயர்ந்திருக்கிறது, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது இதனை கண்டித்தும், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தியும்வரும் 21-ந் தேதி, திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் சிவா ராஜமாணிக்கம், ஒன்றிய கழக செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன். வாசுகி ராம், நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் மற்றும் நீடாமங்கலம் ஒன்றிய, நகர கழக செயலாளர்கள் உள்ளிட்ட மன்னார்குடி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment