திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது நெல்கொள்முதலில் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிக்கும் உள்நோக்கத்தோடு ஆறு இடங்களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் லூலு மார்ட் போன்ற நிறுவனங்கள் நெல் கொள்முதலில் அனுமதிப்பதையும் அவர்கள் அரவை ஆலை அமைப்பதற்கு அனுமதி கொடுத்து 15 ஆண்டுகளுக்கு ஆன ஒப்பந்தம் போட்டு வருகிற 27 ஆம் தேதி டெண்டர் கோரப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன் இந்த நடவடிக்கை உள்நாட்டு வணிகர்களையும் விவசாயிகளையும் பிளவுபடுத்தும் உள்நோக்கு கொண்டது.
இது தமிழ்நாட்டு விவசாயிகளை அழிக்கும் நோக்கம் கொண்டது ஏற்கனவே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு சாதகமாக செயல்படுகிறது என போராடி வந்த நிலையில் தமிழ்நாடு அரசே கொள்முதலில் நேரடியாக கார்ப்பரேட்களை களம் இறக்குவதும் வணிகத்தில் நூலு மாட்டை அனுமதிப்பதையும் தமிழ்நாடு விவசாயிகள் முற்றிலும் எதிர்க்கிறோம் உடனடியாக இந்த டெண்டரை கைவிடப்பட வேண்டும் மறுக்கும் பட்சத்தில் இதற்கு எதிரான போராட்டத்தில் காவிரி டெல்டாவில் தீவிரப்படுத்தி களம் இறங்க நேரிடும் என நாங்கள் எச்சரிக்கிறோம் விவசாயிகள், அரவை மில் உரிமையாளர்கள், வணிகர்கள் கூட்டு போராட்டத்தை தீவிர படுத்துவோம் என நான் தமிழ்நாடு முதலமைச்சருக்கு எச்சரிக்கையாக சொல்லுகிறேன்.


குறிப்பாக இன்றைக்கு உலகம் முழுமையும் பாசுமதி அரிசி தேவை அதிகரித்துள்ளது பாசுமதி அரிசி பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் வாசனை கலந்த அரிசியாக அங்கு உற்பத்தி செய்யப்படுகிறது இதனால் உலக நாடுகளில் மிகப்பெரிய அளவில் ஏற்றுமதி செய்து பஞ்சாப் விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள் இந்த நிலையில் தற்போது உலக நாடுகளில் வாசனை இல்லாத பாசுமதி அரிசியின் மீது மோகம் வந்துள்ளது இதனை பயன்படுத்தி வடக்கு ஆஸ்திரேலியா நாடுகள் வாசனை இல்லாத பாசுமதி அரிசியை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறார்கள் இந்த அரிசியை விநியோகம் செய்வதற்கு வட அமெரிக்க நாடுகள் முழு இறக்குமதி வரியை தள்ளுபடி செய்திருக்கிறார்.
தமிழ்நாட்டிலும் வாசனையில்லாத பாசுமதி அரிசியை தரமாக விற்பனை செய்வதற்கு உற்பத்தி செய்வதற்கு அனைத்து தொழில்நுட்பங்களும் மண் வளங்களும் இருக்கிற நிலையில் அந்த பாசுமதி அரிசியை உற்பத்தி செய்வதற்கான சிறப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் இதற்கு ஏற்கனவே ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் இதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தரமான பாசுமதி அரிசி வாசனை இல்லாத அரிசியை உற்பத்தி செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது எனவே தமிழ்நாடு அரசு இதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் துவங்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
காவிரியில் திறக்கப்பட்ட மேட்டூர் அணையின் தண்ணீர் இதுவரையிலும் கடமடை விளைநிலங்களுக்கு சென்று சேரும் நிலை இல்லை குறிப்பாக 2000 கோடி ஆசிய வளர்ச்சி வங்கி நிதியை பெறுவதற்கு காலதாமதம் படுத்தியதால் காவிரி டெல்டாவில் மிகப்பெரும் பாசன ஆறுகளான கோரையாறு , பாமணி ஆறு உள்ளிட்ட விளைநில பகுதிகளில் தண்ணீரே செல்லாத நிலையில் ஆறுகள் உருவாக்கி இருக்கிறது எனவே தமிழ்நாடு முதலமைச்சர் இரண்டு தினங்கள் டெல்டாவில் தங்குகிற நிலையில் மன்னார்குடியை ஒட்டி ஓடுகிற கோரையாறு, பாமணியாறுகளை முழுமையாக பார்வையிட்டு அதனை தூர் வாருவதற்கு மத்திய அரசிடம் 2000 கோடி நிதியை ஆசிய வளர்ச்சியை வங்கிகளின் மூலம் பெறுவதற்கான நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment