திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை திமிலத்தெரு பகுதியை சேர்ந்தவர் சின்னக்கிளி (எ) அப்துல் சலீம்(60) இவரது மனைவி மும்தாஜ்(59) இவர்களுக்கு திருமணமான ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
இருவருக்கும் திருமணமாகி 37 வருடங்கள் ஆகின்றன இவர்கள் இருவரும் நட்பும், காதலுமாக எல்லாவற்றையிலும் விட்டுக்கொடுத்து சிறந்த தம்பதியாக ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக்கும் மேலாக மனைவி மும்தாஜ் வயது உடல் நிலை காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய மும்தாஜ்க்கு மருந்து வாங்க கணவர் அப்துல் சலீம் தனது இரு சக்கர வாகனத்தில் நேற்று மதியம் பட்டுக்கோட்டைக்கு சென்றார். போகும் வழியில் அப்துல் சலீம் மயங்கி விழுந் விழுந்து படுகாயம் அடைந்தார்.


படுகாயம் அடைந்தவரை மீட்கப்பட்டு தஞ்சை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அப்துல் சலீமின் உடலை முத்துப்பேட்டைக்கு கொண்டு வந்து அவரது வீட்டில் வைத்திருந்தனர்.
உடல் நிலை சரியில்லாத மனைவி மும்தாஜ் அருகில் உள்ள அவரது மகள் வீட்டில் இருந்தார். இவருக்கு அதிர்ச்சி கொடுக்க கூடாது என்பதற்காக இவரிடம் குடும்பத்தினர் கணவர் இறந்த செய்தியை தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 4 மணி நேரம் கழித்து நேற்றிரவு மனைவி மும்தாஜும் திடீரென்று இறந்தார். ஏற்கனவே கணவர் இறந்த அதர்ச்சியில் இறந்த சம்பவத்தால் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்து இருந்த நிலையில் மனைவியும் திடீரென்று இறந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில் கணவர் இறந்தது மனைவிக்கும் மனைவி இறந்தது கணவருக்கும் தெரியாமல் போன நிலையில் தம்பதி சாவிலும் இணைபிரியாத இச்சம்பவம் என முத்துப்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
.jpg)
No comments:
Post a Comment