மன்னார்குடியில் நடைபெற்ற சோழ மண்டல மாற்றுத் திறனாளிகள் சுயம்வரம் நிகழ்ச்சியில், 10 இணையர்கள் தேர்வு செய்யப்பட்டனர். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 4 June 2023

மன்னார்குடியில் நடைபெற்ற சோழ மண்டல மாற்றுத் திறனாளிகள் சுயம்வரம் நிகழ்ச்சியில், 10 இணையர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சோழ மண்டல  மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு தமிழ்நாடு மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் சென்னை ஸ்ரீகீதாபவன் அறக்கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்து கொள்ள விரும்பும் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி  மன்னார்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்ய முன்வரும் நல்ல நிலையில் உள்ளவர்கள் என இரு பிரிவுகளாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மொத்தம்   150 க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.


இதில் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் மட்டும் 10 இணையர்கள் தேர்வு செய்யப்பட்டனர்  இவர்களுக்கான  திருமணம் விரைவில்  நடைபெறும்  பின்னர் திருமணத்தின் போது ஒவ்வொரு திருமண ஜோடிக்கும்  கால் பவுன் நகை, பட்டுவேஷ்டி, சேலை, 51 வகையான சீர்வரிசைப் பொருள்கள், 2 மாத காலத்துக்கு தேவையான மளிகைப் பொருள்கள் அத்துடன் ரூ.2, லட்சம் மதிப்புள்ள சீர்வரிசைப்பொருள்கள்  வழங்கப்படும்.


சுயம்வரம் நிகழ்ச்சியில்  மாவட்ட மாற்றுதிறனாளி நல அலுவலர் புவனா கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் பா.சிம்மச்சந்திரன், உள்ளிட்ட  மாற்றுத் திறனாளிகள் நலச்சங்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


- செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad