வைகாசி பௌர்ணமியையொட்டி மன்னார்குடியில் நடைபெற்ற உதயகருட சேவை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற ராஜகோபால சுவாமி கோவில் மற்றும் கோபிநாத பெருமாள் கோவில்களின் கருட சேவை நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்றனர்.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வைகாசி பௌர்ணமி ஒட்டி இன்று காலை புகழ்பெற்ற ராஜகோபால சுவாமி கோவில் மற்றும் கோபிநாத பெருமாள் கோவில் ஆகிய இரண்டு கோவில்களிலும் கருட சேவை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் இன்று உதய கருட சேவை நடத்தப்பட்டது. கோவிலில் இருந்து ராஜகோபால சுவாமி பரமபதநாதன் அலங்காரத்தில் கருட வாகனத்தில் புறப்பட்டு இன்று காலை 6 மணிக்கு வீதி உலா வந்தார்.
கோவில் யானை செங்கமலம் முன்னே வர கருட வாகனத்தில் வந்த ராஜகோபால சுவாமி பாமணி ஆற்றங்கரைக்கு எழுந்தருளினார். அதேபோல கோபிநாத சுவாமியும் கருட வாகனத்தில் கோவிலில் இருந்து வீதி உலாவாக வந்து கீழ ராஜா வீதியின் துவக்கத்தில் பாமணி ஆற்றங்கரையில் எழுந்தருளினார்.
அப்போது இரண்டு கோவில்களின் சுவாமிகளுக்கும் ஒருசேர தீப ஆராதனை கட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment