
மன்னார்குடியை அடுத்த வடபாதி கிராமத்தை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவரது மகள் மதுமிதா மற்றும் இரண்டு பேர குழந்தைகளுடன் திருவாரூர் மருத்துவக்கல்லூரிக்கு உறவினரை பார்பதற்காக மன்னார்குடி திருவாரூர் சாலை மார்க்கத்தில் இருசக்கரவாகனம் மூலம் திருவாரூர் நோக்கி வந்தனர்.
அப்போது சவளக்காரன் என்ற இடத்தில் திருவாரூரில் இருந்து மன்னார்குடி நோக்கி வந்த அரசு பேருந்து இருசக்கரவாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மீனாட்சிசுந்தரம் 55 அவரது மகள் மதுமதி 29 இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரழந்தனர்.
இதில் படுகாயம் அடைந்த இரண்டு குழந்தையை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுவந்தனர். பின்னர் குழந்தைகளை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தமிழ் இனியா 3 வயது குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து மன்னார்குடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பேருந்து மோதி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment