
பல்வேறு சிறப்புகளைக்கொண்ட இவ்வாலயத்தில் நடைபெற்ற சித்ரா பௌர்ணமி வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பால்குடங்களை சுமந்து முக்கிய வீதிகள் வழியாக திருக்கோவிலை அடைந்தனர். இதனை தொடர்ந்து ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு மஞ்சள், திரவியப்பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் முதலான வாசனை திரவிய நிறுமணப்பொருட்களைக்கொண்டு மகாஅபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் செடில்காவடி, அலகு காவடி, மின்னொலி அலங்கரத்தில் மிளிரிய கண்கவரும் காவடிகளை சுமந்து ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு நேர்ததிகடனை செலுத்தி திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
பின்னர் முருகப்பெருமானுக்கு வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சண்முகா அர்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியை மனமுருக வழிபட்டனர்.
- செய்தியாளர் தருண் சுரேஷ்
No comments:
Post a Comment