வலங்கைமான் அருகே வேடம்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் ஆயிரம் திருவிழா நடைபெற்றது. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 6 May 2023

வலங்கைமான் அருகே வேடம்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் ஆயிரம் திருவிழா நடைபெற்றது.


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே வேடம்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் ஆயிரம் என்ற தலைப்பில் அறிவியல் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வலங்கைமான் அ வட்டார கல்வி அலுவலர் சுகந்தி தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் வகித்தார்.

இதில்  திட திரவ வாயுப் பொருட்களின் பண்புகள்,நிலா, வியாழன், செவ்வாய், வெள்ளி ஆகிய கோள்களையும், வானில் தெரியக்கூடிய நட்சத்திரக் கூட்டங்கள், சூரிய கிரகணம், சந்திர கிரகணம் உள்ளிட்ட இயற்கை வான் நிகழ்வுகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு அறிவியல் தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. 


இதில் ஸ்டெம் பயிற்சியாளர்கள்  விஜய், ஜோதிபாசு ,இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் அன்பரசி, சுதா லக்ஷ்மி, துர்கா ,  வட்டார  ஒருங்கிணைப்பாளர் நிர்மல் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை நடத்தினர். இந்நிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள் பல்வேறு மூட நம்பிக்கைகள் பின்னால் உள்ள அறிவியல் உண்மைகள் கண்டு வியப்புற்று தெளிவு பெற்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad