மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் முப்பதாம் ஆண்டின் துவக்க விழா திருவாரூர் ஒன்றியம் மற்றும் திருவாரூர் நகரத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 6 May 2023

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் முப்பதாம் ஆண்டின் துவக்க விழா திருவாரூர் ஒன்றியம் மற்றும் திருவாரூர் நகரத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் முப்பதாம் ஆண்டின் துவக்க விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் ஒன்றியம் கூடூரில் மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் ஆரூர் சீனிவாசன் அவர்களின் ஏற்பாட்டில் கழக கொடி ஏற்றப்பட்டது. மேலும் திருவாரூர் நகரம் புதிய பேருந்து நிலையத்தின் அருகில் மேம்பாலத்தில் திருவாரூர் நகர கழக செயலாளர் எஸ் கபிலன் அவர்களின் ஏற்பாட்டில் ஏற்றப்பட்டது. கழக கொடி ஏற்றி வைத்து மற்றும் இனிப்புகள் வழங்கினர்.


மேலும் திருவாரூர் ஒன்றியம் கீழக்காவாவது ஊராட்சி சேந்தமங்கலத்தில் திருவாரூர் ஒன்றிய கழக செயலாளர் டி ஆர் தமிழ்வாணன் அவர்களின் ஏற்பாட்டில் கழக கொடி ஏற்றப்பட்டது. கழகக் கொடி ஏற்றியும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடப்பட்டது.



இந்நிகழ்வில் திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் ப பாலச்சந்திரன் மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் ஆரூர் சீனிவாசன் மாநில கலைத்துறை துணை செயலாளர் எஸ் ஜெயராமன் மாவட்ட துணை செயலாளர் செந்தில் முருகன் திருவாரூர் ஒன்றிய கழக செயலாளர் டி ஆர் தமிழ்வாணன் திருவாரூர் நகர கழக செயலாளர் கபிலன் பொதுக்குழு உறுப்பினர்கள் அலிவலம் ராஜ் மண்ணை மீனாட்சிசுந்தரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் T.ஹரிராஜன், ஒன்றிய அவைத் தலைவர் வெங்கட்ராஜுலு, எல் ஐ சி கிருஷ்ணன், கீழகாவதுகுடி கிளை செயலாளர் ராமலிங்கம், மூத்தவர் ராமச்சந்திரன், இளைஞர் அணியினர் ராஜ்மோகன், சுதர்சன், அம்பரஞ்சித், பிரசன்னா, ரிபாஸ் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் ரா.பிரியங்கா.

No comments:

Post a Comment

Post Top Ad