
இந்நிலையில் அதற்காக அதற்கான போராட்டத்தை நடத்துவதற்கு குத்தகைதாரர்கள் பாதுகாப்பு நல சங்க அமைப்பை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்திருந்தனர். அப்போது வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் தாசில்தார் மகேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் கோவிலூர் செயல் அலுவலர் வருவாய்த்துறை, அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதே போல போராட்டக் குழு சார்பில் அமைப்பின் மாநில தலைவர் செருகளத்தூர் ஜெயசங்கர், திருவாரூர் மாவட்ட தலைவர் துறையரசன், நாகப்பட்டினம் மாவட்ட தலைவர் விவேக் தியாகராஜன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் மூர்த்தி, மாநில செயலாளர் குன்னலூர் சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து பலர் கலந்து கொண்டனர்.
இதில் அதிகாரிகள் தரப்பில் நெல் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தற்காலிக ரசிதை அலுவலகத்தில் ஒரு வார காலத்திற்குள் செலுத்தி நிரந்தர ரசித்துப் பெற்றுக் கொள்ளலாம் அதே போல் தேங்காய்களுக்கு தேங்காய் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் இடத்திலேயே தற்காலிக ரசீது தேங்காய் களின் எண்ணிக்கை குறிப்பிட்டு வழங்கப்படும்.
ஆர் டி ஆர் பதிவு பதிவிற்கு விண்ணப்பம் தெரிவிக்கப்படுகிறது என எழுத்துப்பூர்வமாக விவசாயிகளுக்கு உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து நடைபெற இருந்த காத்திருப்புப் போராட்டம் கைவிடப்பட்டதாக விவசாய குத்தாரர்கள் பாதுகாப்பு நல சங்கதினர் தெரிவித்தனர்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment