திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே புகழ் பெற்ற வைணவ ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும் வடுவூர் கோதண்டராமர் கோவில் வளாகத்தில் உள்ள அகோபிலமடத்தில் லட்சுமி நரசிம்மர் சன்னதி அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஓவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வளர்பிறை சதுர்த்தசி தினத்தை ஒட்டி நரசிம்ம ஜெயந்தி விழா கொண்டாடப்படும் அந்த வகையில் இன்று நரசிம்மர் ஜெயந்தி விழாயொட்டி சன்னதியில் இருக்கும் உற்சவ ஊஞ்சலில் வைத்து மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு மலர் மாலைகளை அணிவித்து அலங்கரித்து இருந்தனர்.

பின்னர் உற்சவர் லட்சுமி நரசிம்மரை ஊஞ்சலில் எழுந்தருள செய்தனர். சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தீபதரனை சுவாமிகளுக்கு காண்பிக்க பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்
- செய்தியாளர் தருண்சுரேஷ்.
No comments:
Post a Comment